நட்டத்தில் ஓலா நிறுவனம் ஓட்டுநர்களின் எதிர்காலம் என்னவாகும்


இந்தியாவின் மிகப் பெரிய வாடகை டாக்ஸி வலைப்பின்னலானஓலாவை நடத்திவரும்ஏஎன்ஐ டெக்னாலாஜிஸ்’, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2018-19ம் நிதியாண்டில் ஏறக்குறைய 60% வருமானச் சரிவைச் சந்தித்துள்ளது. ரூ.1,160 கோடி என்று இந்தச் சரிவு கணக்கிடப்படுகிறது.


விளம்பரங்கள், வளர்ச்சி நடவடிக்கைகள், ஓட்டுநர்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்கத் தொகைகளே இந்த நட்டத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்தச் செலவு ரூ.3,315 கோடி. இதில் ரூ.1,700 கோடியானது ஓட்டுநர்கள் தொடர்பான செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டன.


அதற்கு முந்தைய நிதியாண்டில் ஓட்டுநர்களுக்காகச் செலவழிக்கப்பட்ட தொகை ரூ.2,400 கோடி. ‘ஓலாவின் நிதியிழப்பு, நடப்பு ஆண்டில் ஓட்டுநர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் செலவுகளை மேலும் குறைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதியம், காப்பீடு, கூடுதல் பணி நேரங்களுக்கான கூடுதல் படிகள் எதுவும் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படாத நிலையில், அவர்களுக்குத் தற்போது கிடைத்துவரும் ஊக்கத்தொகைகளாவது தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.