இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள்


இந்தியாவில் இருந்து 4,500 பொருட்களுக்கும் மேலாக ஏற்றுமதி / இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கோடு இருக்கிறது .  அதன் பெயர் எச்.எஸ். கோடு (ஹார்மனைஸ்டு சிஸ்டம் கோடு – Harmonised System Code) என அழைக்கப்படும். இது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் பொதுவானது. இது இன்ட்ர்நெட்டில் பல இடங்களில் இலவசமாகவும் கிடைக்கிறது, புத்தகமாகவும் கிடைக்கிறது. கூகுள் கடவுளை அழைத்தால் இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் பிரிவுகள் இலவசமாகக் கிடைக்கும் போது ஏன் பிரிண்டட் புத்தகத்தை வாங்க வேண்டும். கீழ்கண்ட இணையதளங்களை பாருங்கள்....


http://www.cybex.in/HS-Codes/Default.aspx


http://www.eximguru.com/hs-codes/


http://www.dgft.org/itc_hs_code.html


இதில் 21 பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவின் கீழும் பல துணைப்பிரிவுகள், பொருட்கள் என்று வகைப்படுத்தப்பட்டிருகின்றது.


HS Code has Major 21 Sections



மேலே கண்ட 21 பிரிவுகளில் 98 உட்பிரிவுகள் இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது. அதனுள் அந்த பிரிவு ஒவ்வொரு பொருட்களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் ஏற்றுமதி செய்ய நினைத்திருக்கும் பொருளை 98 பிரிவுகளில் எப்படி தேடுவது என்று கவலையடையாதீர்கள். மேலே மூன்று இணையதள லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் மூலம் இந்த இணையதளங்களுக்கு சென்றீர்கள்யானால் அங்கு இருக்கும் தேடு (SEARCH) பகுதி மூலம் உங்கள் பொருட்களுக்கான ஹெ.எஸ்., கோடு என்னவென்று கண்டுபிடித்து விடலாம். இல்லாவிடில் “உங்கள் பொருளின் பெயரையும், ஹெ.எஸ்., கோடு” ( உதாரணம் PLASTIC BUCKETS H.S. CODE) என்ற வார்த்தையையும் கூகுள் தேடு (GOOLE SEARCH) இயந்திரத்தில் டைப் செய்தால், உங்கள் பொருளுக்கான் கொடு கிடைத்து விடும். உங்களுடைய கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜெண்ட்-ம் (CHA) உங்களுக்கு எச்.எஸ்., கோடு கிடைக்க  உதவி செய்வார்.


இதன் முக்கியத்துவம் என்ன என்பதையும் பார்த்து விடுவோம். உதாரணமாக வெளிநாட்டில் உள்ளவர் ஒரு குறிப்பிட்ட பொருள் அனுப்ப சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அவர் இறக்குமதி செய்ய நினைத்தது ஒரு பொருளாக இருக்கும். அதே வெரைட்டியில் நீங்கள் நினைத்தது ஒரு பொருளாக இருக்கும். இது போன்ற குழப்பங்கள் நீங்கள் இருவரும் வேறு வேறு மொழிகள் பேசப்படுவதால் வருவபவை. அப்படி வேறு பொருட்கள் அனுப்பும் போது அவை இறக்குமதியாளரால் நிராகரிக்கப்படலாம். இந்த குழப்பங்களை தவிர்க்க தான் ஹெ.எஸ்., கோடு இருக்கிறது. ஆதலால் நீங்கள் முதலில் ஏற்றுமதியாளர் ஆக வேண்டும் என்று நினைத்தவுடன் முதலில் செய்ய வேண்டியது, இந்த புத்தகம் பற்றி சிறிது நாலெட்ஜை வளர்த்துக்  கொள்ள வேண்டும்.


தமிழ்நாடும், ஏற்றுமதியும்


தமிழ்நாட்டில் இருந்து என்னென்ன பொருட்கள் ஏற்றுமதியாகின்றன என்ற ஒரு குழப்பம் உங்களுக்கு இருக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பெரும்பான்மையான பொருட்கள் என்னென்ன என்று பார்ப்போம்.



  • இஞ்சினீரியங் பொருட்கள்

  • காட்டன் யார்ன் / துணிகள்

  • ரெடிமேட் துணிகள்

  • லெதர் பொருட்கள்

  • காஸ்மெடிக்ஸ்

  • கார்கள்

  • கைவினைப் பொருட்கள்

  • சாப்ட்வேர்

  • கெமிக்கல்ஸ்

  • கிரானைட்ஸ்


எந்தப் பொருளுக்கும் ஏற்றுமதி வாய்ப்புகள் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.


- Sethuraman Saathapan