பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம்


தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு நிலைகளில் எதிர்கொண்டு வருகிறது  வருகிறது. ஊரடங்கு அமலுக்கு வந்தபின், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர், விவசாயிகள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், தினக்கூலிகள், வடமாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள்  என   பலருக்கும் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.


 தமிழக வரலாற்றிலேயே  முதல் முறையாக, இதுவரை எந்த ஆட்சியாளர்களும் செய்யாத மிகப்பெரிய உதவியாக பத்திரிகை பணியில் ஈடுபட்டுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஏற்கனவே ரூபாய் 3000/- நிவாரண தொகையாக முதலமைச்சர் அறிவித்துள்ளார் . 


இதை தொடர்ந்து இன்று (16/4/2020) பத்திரிகையாளர்களை சந்தித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், "பணியில்  இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு, ஏதாவது சூழலில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாக நேரிட்டால்,  அவர்களது சிகிட்சைக்கான மொத்த செலவையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்" என்று அறிவித்தார். 


"தவிர்க்க இயலாத காரணத்தால் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுமாயின், பத்திரிகையாளரின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய்  நிவாரணம் வழங்கப்படும்" என்றும் அறிவித்தார்.